Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 04 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் 74 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில், இன்று (04) கொண்டாடப்பட்டன. அந்த நிகழ்வுகளுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்களுக்கு உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன அவற்றில் சில…(படங்களும் தகவல்களும்: தமிழ்மிரர் நிருபர்கள்)
மட்டக்களப்பில்...
மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டார்.
சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில்...
அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீ லங்காவின் தேசிய தவிசாளரும், சிலோன் மீடியா போரத்தின் பொருளாளருமான தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு செயலாளர், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் பணிப்பாளர் நூருல் ஹுதா உமரின் தலைமையில் கமு/ கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
ஹட்டனில்....
ஹட்டன்-டிக்கோயா ஓட்டோ சங்கத்தின் ஏற்பட்டில், ஹட்டனில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
ஓட்டமாவடியில்..
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வீ.தவாராஜாவின் தலைமையில் சுதந்திர நிகழ்வுகள் நிடைபெற்றன.
அரபுக் கல்லூரியில்...
ஓட்டமாவடி மீராவோடை மன்பஉல் ஹிதா அரபுக் கல்லூரியில், லெவ்பை தம்பி அப்துல் ஹலீம் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
மன்னாரில்...
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாகாவத்த தலைமையில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,தாராபுரம் கோரைக்குளம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில்...
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனால் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
ஹப்புத்தளையில்...
ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
நுவரெலியாவில்...
நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட நுவரெலியா மாநகர சபை ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் , அரச உத்தியோகத்தினர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இரத்தினபுரியில்...
இரத்தினபுரி சீவலி விளையாட்டு மைதானத்தில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேடுவ தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
தலவாக்கலையில்...
தலவாக்கலை பொலிஸாரால் மடக்கும்புற சிறுவர் பாராமரிப்பு நிலையத்தில் மரக் கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் தலவாக்கலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் காந்தரூபன், பாடசாலை மாணவர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
வவுனியாவில்...
வவுனியா பொது மைதானத்தில் நேற்று (04) நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago