Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2021 ஜூன் 15 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக, அம்பாறை மாவட்டத்தில் 241 ஆவது படையணியின் பிரிகேடியர் விமல்ஜனக விமலரத்ன வழிகாட்டலில் பல்வேறு திட்டங்கள் இங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணைக் கிராமத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட ஐந்து பிள்ளைகளின் தந்தையான, கைலாயப்பிள்ளை நாகராசா என்பவரின் குடும்பத்திற்கு எட்டு 08 இலட்சம் ரூபாய் பெறுமதியில் வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்க்கு இராணுவத்தினர் முன்வந்துள்ளதுடன், இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை(14) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை இராணுவமுகாம் பொறுப்பதிகாரி மேஜர் விஜயக்கோன்,அக்கரைப்பற்று இராணுவமுகாம் பொறுப்பதிகாரி கேணல் புஸ்பஸ்ரீ,கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் உட்பட இராணுவத்தினர், பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த வீடானது மூன்று மாத காலத்திற்குள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கல்முனை பிரதேச இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
42 minute ago