Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அணியில் தொடர்கிறார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று, அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் வரும் 19-ம் திகதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) நேற்று தேர்வு செய்து அறிவித்துள்ளது.
இதுநாள் வரை இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா, பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.
அதேபோல் டி20 போட்டிகளுக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஷுப்மன் கில் துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், நித்திஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .