Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 01 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், அத்லாண்டாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் லேஸியோ வென்றது.
லேஸியோ சார்பாக, அடம் மருசிச், ஜோக்கின் கொரெரா, வெடட் முறிக்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை மரியோ பஸ்காலிச் பெற்றிருந்தார்.
இப்போட்டிகளின் முடிவில், சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 46 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஏ.சி மிலனுள்ளது. 44 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இன்டர் மிலனும், 40 புள்ளுகளுடன் மூன்றாமிடத்தில் றோமாவும், 39 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸும் காணப்படுகின்றன. இதில், ஏனைய அணிகளை விட ஜுவென்டஸ் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago