2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அரையிறுதிப் போட்டியில் ரொஜர் பெடரர்

Editorial   / 2017 நவம்பர் 15 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்றுவரும் டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, உலகின் இரண்டாம் நிலை வீரரான, சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் தெரிவாகியுள்ளார்.

தனது முதலாவது குழுநிலைப் போட்டியில், உலகின் ஒன்பதாம் நிலை வீரரான, ஐக்கிய அமெரிக்காவின் ஜக் ஸ்டொக்கை வென்ற ரொஜர் பெடரர், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற தனது இரண்டாவது குழுநிலைப் போட்டியில், உலகின் மூன்றாம் நிலை வீரரான, ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை, 7-6 (8-6), 5-7, 6-1 என்ற செட் கணக்கில் வென்றதன் மூலமே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற போட்டியில், ஜக் ஸ்டொக், 5-7, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில், உலகின் ஐந்தாம் நிலை வீரரான, குரோஷியாவின் மரின் சிலிச்சை வென்றிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .