Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சுக் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் பிரெஞ்சுக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் தகுதிபெற்றுள்ளது.
விலகல் முறையிலான இத்தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று (27) அதிகாலை இடம்பெற்ற டியோனுடனான காலிறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே, அரையிறுதிப் போட்டிக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் தகுதிபெற்றுள்ளது.
இப்போட்டியின் எட்டாவது நிமிடத்தில், சக முன்கள வீரர் ஜுலியன் ட்ரக்ஸ்லர், டியோனின் பின்கள வீரர்களுக்குள்ளால் கொடுத்த பந்தை, பெனால்டி பகுதியின் ஆரம்பத்திலிருந்து அதிசிறப்பாக தூக்கிப் போட்டு கோலைப் பெற்ற பரிஸ் ஸா ஜெர்மைனின் இன்னொரு முன்கள வீரரான ஏஞ்சல் டி மரியா, தனதணிக்கு ஆரம்பத்திலேயே முன்னிலையை வழங்கினார்.
இந்நிலையில், இன்னொரு சக முன்கள வீரர் எரிக் சூக்கு-மோட்டிங்குக்கு தவறாகக் கொண்டுத்த பந்து தன்னிடமே வர, அதை போட்டியின் 20ஆவது நிமிடத்தில் கோலாக்கிய டி மரியா, பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.
தொடர்ந்த போட்டியின் முதற்பாதியில், தனது மூன்றாவது கோலைப் பெற டி மரியா எதிர்பார்த்தபோதும், கோல் கம்பத்தை நோக்கிய அவரின் உதையை டியோனின் பவடா சபிக் தடுத்திருந்தார். மறுமுனையில், டியோனின் முன்கள வீரர் ஜூலியோ தவரேஸின் கோல் கம்பத்தை நோக்கிய உதை கோல் கம்பத்திப் பட்டுத் திரும்பியிருந்தது.
பின்னர், ஜுலியன் ட்ரக்ஸ்லரின் கோல் கம்பத்தை நோக்கி இரண்டு உதைகளை, டியோனின் கோல் காப்பாளர் ருனால் ருனர்சன் தடுத்திருந்த நிலையில், கோல் பெறும் மூன்று நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்த எரிக் சூக்-மோட்டிங் கொடுத்த பந்தை, அவரின் சக பின்கள வீரர் தோமஸ் மொய்யோ போட்டியின் 76ஆவது நிமிடத்தில் தந்திரமாகக் கோலாக்க, இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற பரிஸ் ஸா ஜெர்மைன், அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
மேற்படி போட்டியில், பரிஸ் ஸா ஜெர்மைனின் காயமடைந்துள்ள நட்சத்திர முன்கள வீரர்களான நேமர், எடின்சன் கவானி தவிர, இளம் முன்கள வீரரான கிலியான் மப்பேயும் விளையாடியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago