Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 29 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிக்கெட் உலகில் இதுவரை நடக்காத ஒரு அவமானகரமான மற்றும் மோசமான சம்பவத்துடன், 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டி நிறைவடைந்துள்ளது. பாகிஸ்தானை வீழ்த்தி, 9வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி, கோப்பையுடன் கொண்டாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, வெறும் கையுடன் ஹோட்டலுக்குத் திரும்ப வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவருமான மோஷின் நக்வி, வெற்றி பெற்ற அணிக்கான கோப்பையைத் தன்னுடன் எடுத்துக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவம், கிரிக்கெட்டின் கருப்பு நாளாகப் பதிவாகியுள்ளது.
இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவையான ரன்னை ரிங்கு சிங் அடித்த பிறகு, இந்திய வீரர்கள் களத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். போட்டிக்குப் பிந்தைய வீரர்களின் நேர்காணல்கள் நடந்தன. ஆனால், அதன் பிறகு நடந்ததுதான் உச்சகட்ட நாடகம். ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பரிசளிப்பு விழா தொடங்கப்படவில்லை.
தொடக்கத்தில் இந்திய அணி, மோஷின் நக்வி கையால் கோப்பையை வாங்க மறுப்பதாகச் செய்திகள் பரவின. ஆனால், உண்மையான காரணம் அதைவிட மோசமானதாக இருந்தது. தொடர்ந்து பல குழப்பங்கள் நடந்த நிலையில், அதன் முடிவில் இந்திய அணிக்கு வழங்க வேண்டிய ஆசிய கோப்பையையும், பதக்கங்களையும் எடுத்துக் கொண்டு வெளியேறினார் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி.
தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி வீரர்கள் நீண்ட நேரமாகத் தங்களது உடைமாற்றும் அறைக்குள்ளேயே இருந்தனர். இறுதியாக, கேப்டன் சல்மான் அலி அகா, பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸனுடன் வெளியே வந்தபோது, ரசிகர்கள் அவர்களைக் கூச்சலிட்டு அவமானப்படுத்தினர். சில வீரர்கள், செருப்புகளுடன் (flip-flops) சாதாரணமாக நடந்து வந்தது, ரசிகர்களின் கோபத்தை மேலும் அதிகரித்தது.
பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களது பதக்கங்களைப் பெற்ற பிறகு, கேப்டன் சல்மான் அகா, இரண்டாம் இடத்திற்கான பரிசுத் தொகையை மோஷின் நக்வி முன்பாகவே தூக்கி எறிந்து தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.
மேடையில் இருந்த மோஷின் நக்விக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் இந்திய அணிக்கு கோப்பையை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அந்தத் திட்டமும் மாற்றப்பட்டது.
இறுதியாக, இந்திய அணி கோப்பையைப் பெறும் நேரம் வந்தபோது, வர்ணனையாளர் சைமன் டூல், "இன்றிரவு இந்திய அணி கோப்பையைப் பெற்றுக்கொள்ளாது என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எங்களுக்குத் தெரிவித்துள்ளது," என்று ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார்.
போட்டியில் வென்ற இந்திய அணி மேடையில் கோப்பைக்காகக் காத்துக்கொண்டிருக்க, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரே, கோப்பையைத் தன்னுடன் எடுத்துக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்திய அணி கோப்பையுடன் புகைப்படம் எடுப்பதை விரும்பாததாலேயே அவர் இந்த கேவலமான செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்திய அணியின் திட்டத்தை சொன்ன கில் இந்திய அணி மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற மறுத்ததற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக அவர் இவ்வாறு நடந்து கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஒரு அணிக்கு, கோப்பையுடன் கொண்டாடும் உரிமை மறுக்கப்பட்டது, ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் ஒருபோதும் நடந்திராத அவமானமாகும். இந்தச் செயல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago