2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஆசியக் கிண்ணத்தில் சந்திமால் இல்லை?

Editorial   / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரில் தினேஷ் சந்திமால் பங்கேற்பது சந்தேகத்துக்கிடமானதாகக் காணப்படுகிறது.

அண்மையில் முடிவடைந்த உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரில், தனது வலது கையின் நடு விரலை முறித்துக் கொண்டமை காரணமாகவே ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கைக் குழாமில் இடம்பெற்றுள்ள தினேஷ் சந்திமால் ஆசியக் கிண்ணத்தில் பங்கேற்பாரா என சந்தேகமெழுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கைக் குழாமில் இடம்பெற்றுள்ள அகில தனஞ்சய தனது முதல் பிள்ளையை எதிர்பார்த்து காத்திருப்பதன் காரணமாக தொடரின் முதலிரண்டு போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .