2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: வெள்ளி வென்றார் சிந்து

Editorial   / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பலெம்பாங்கில் இடம்பெற்றுவரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான தனிநபர் பூப்பந்தாட்டத்தில் இந்தியாவின் பி.வி சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை பூப்பந்தாட்ட வீராங்கனையான தாய்வானின் தாய் ஸு யிங்கிடம் 13-21, 16-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே வெள்ளிப் பதக்கத்தை பி.வி சிந்து பெற தாய் ஸு யிங் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

அந்தவகையில், ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில், தனிநபர் பூப்பந்தாட்டப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதலாவது இந்தியராக தனது பெயரை பி.வி சிந்து பதிவு செய்து கொண்டார்.

தாய் ஸீ யிங்கிடம் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்தியாவின் சாய்னா நெஹ்வால் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவின் ஆண், பெண் வில் அம்பு எய்தல் அணிகளும் இன்று வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தன. இரண்டு அணிகளும் தென்கொரியாவிடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், தென்கொரியா தங்கப் பதக்கத்தை வென்றிருந்தது.

இந்திய ஆண்கள் அணியில் அபிஷேக் வேர்மா, ராஜட் சோக்கான், அமன் சைனியும் பெண்கள் அணியில் ஜயோதி சுரேக்கா வெண்ணம், மதுமிதா குமாரி, முஸ்கன் கிரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதேவேளை, இன்று இடம்பெற்ற ஆண்களுக்கான தொகுதி ஏ ஹொக்கி போட்டியொன்றில் 20-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவிடம் இலங்கை தோல்வியடைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .