Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி தொடர்களுக்கான இலங்கைக் குழாமில் முன்னாள் தலைவரான அஞ்சலோ மத்தியூஸை சேர்த்துக் கொள்ளாமல் விடுவதற்கு தேர்வாளர்கள் தீர்மானித்துள்ளதாக அறியப்படுகிறது.
அந்தவகையில், உடற்றகுதிச் சோதனைக்கு முன்னரே உடற்றகுதி தொடர்பான கரிசனைகள் காரணமாக இங்கிலாந்துக்கெதிரான தொடர்களுக்கான இலங்கைக் குழாமில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டீர்கள் என அஞ்சலோ மத்தியூஸிடம் கூறப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வாளர்களிடமிருந்து உடற்றகுதிச் சோதனையொன்றை மத்தியூஸ் கோரியதாகக் கூறப்படுகிறது.
2015ஆம் ஆண்டிலிருந்து மத்தியூஸ் அதிக எடையைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதுடன், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு விதமான காயங்களால் தொடர்களை தவறவிட்டபோதும், 2017ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து 22 இனிங்ஸ்களில், 100 பந்துகளுக்கு 76 ஓட்டங்கள் என்ற வகையிலென்றாலும் 59.2 என்ற சராசரியில் 888 ஓட்டங்களை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெற்றிருந்தார்.
இதேவேளை, ஆசியக் கிண்ணத்தின் இரண்டு போட்டிகளிலும் குறிப்பிடத்தக்கதாக ஓட்டங்களெதனையும் பெறாததோடு, இரண்டு ரன் அவுட்களில் பங்கெடுத்ததால் விமர்சனத்துக்கு மத்தியூஸ் உள்ளாகியிருந்தார்.
எவ்வாறெனினும், இதற்கு முன்னர் இலங்கை இறுதியாகப் பங்கெடுத்த இருதரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரான தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரின் ஐந்து போட்டிகளில், 100 பந்துகளுக்கு 83 ஓட்டங்கள் என்றவாறு, 78.33 என்ற சராசரியில் 235 ஓட்டங்களை மத்தியூஸ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago