Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 07 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது டெஸ்ட், இலண்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கின்றது.
இத்தொடரை ஏற்கெனவே கைப்பற்றியபோதும் தமது அணியில் இருக்கும் குறைபாடுகளை இங்கிலாந்து சரிசெய்வதற்கானதும் தொடரை இழந்தபோதும் வெளிநாட்டு மண்ணில் தாம் சாதிக்கக் கூடியவர்களென இந்தியா நிரூபிப்பதற்கான போட்டியாக இப்போட்டி நோக்கப்படுகிறது.
நான்காவது டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து அணியில், முதன்மை சுழற்பந்துவீச்சாளராகவிருந்த அடில் ரஷீட்டுக்குப் பதிலாக மேலதிகத் துடுப்பாட்ட வீரர் ஒலி போப்பை பிரதி செய்யும் மாற்றமொன்றுடன் இங்கிலாந்து இன்று களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த போட்டியுடன் இங்கிலாந்தின் முன்னாள் தலைவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான அலிஸ்டயர் குக் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகின்ற நிலையில், இனி அமையப் போகும் புதிய ஆரம்பக் கூட்டணியில் தனது இடத்தை உறுதிப்படுத்துவதற்கு மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கீட்டன் ஜெனிங்ஸ் ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.
மறுபக்கத்தில், நான்காவது டெஸ்டில் சோபிக்காத இந்தியா ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் லோகேஷ் ராகுல், ஷீகர் தவான் ஆகியோரில் ஒருவருக்குப் பதிலாக இளம் வீரர் பிறித்திவி ஷா இன்றைய போட்டியில் விளையாடுவார் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டபோதும் ராகுல், தவான் இணைக்கு இன்றைய போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இதேவேளை, சகலதுறை வீரர் ஹர்டிக் பாண்டியாவுக்குப் பதிலாக இளம் துடுப்பாட்ட வீரர் ஹனும விஹாரியும் இரவிச்சந்திரன் அஷ்வினுக்குப் பதிலாக இரவீந்திர ஜடேஜா களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago