2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இத்தாலியை வென்றது போர்த்துக்கல்

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் தேசங்களுக்கான லீக் தொடரில் நேற்று  இடம்பெற்ற குழு ஏ3 போட்டியொன்றில் இத்தாலியை போர்த்துக்கல் வென்றது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் களமிறங்கிய போர்த்துக்கல், போட்டியின் 48ஆவது நிமிடத்தில் அன்ட்ரே சில்வா பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வென்றிருந்தது.

அந்தவகையில், சிநேகபூர்வ, பயிற்சிப் போட்டியல்லாத போட்டிகளைத் தவிர்த்து, 1957ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக இத்தாலியை போர்த்துக்கல் வென்றிருந்தது.

குறித்த போட்டிக்கான இத்தாலியக் குழாமில், முன்னணி முன்கள வீரரான மரியோ பலோட்டலி உள்ளிட்டோரை அவ்வணியின் பயிற்சியாளர் றொபேர்ட்டோ மன்சினி சேர்த்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற குறித்த தொடரின் குழு பி2 போட்டியொன்றில் இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்தபோதும் இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் சுவீடனை துருக்கி வென்றிருந்தது.

துருக்கி சார்பாக, எம்ரே அக்பாபா இரண்டு கோல்களையும் ஹகன் கல்ஹனோக்லு ஒரு கோலையும் பெற்றனர். சுவீடன் சார்பாக, இஸாக் தெலின், விக்டர் கிளாசன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, சேர்பியா, றோமானியாவுக்கிடையே நேற்று  இடம்பெற்ற குறித்த தொடரின் சி4 போட்டியொன்றில் இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

சேர்பியா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அலெக்ஸான்டர் மிற்றோவிக் பெற்றிருந்ததோடு, றோமானியா சார்பாக, நிக்கொலாயு ஸ்டான்ஞ்சு, ஜோர்ஜஜ் தியான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .