2026 மே 21, வியாழக்கிழமை

dd

இந்தியக் குழாம்களில் அக்ஸர் இல்லை

Shanmugan Murugavel   / 2026 மே 20 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானுக்கெதிரான தொடருக்கான இந்தியக் குழாம்களில் அக்ஸர் பட்டேல் தெரிவு செய்யப்படவில்லை.

ஜஸ்பிரிட் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், இரவீந்திர ஜடேஜாவும் இத்தொடரில் தெரிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான உப அணித்தலைவராக றிஷப் பண்டை லோகேஷ் ராகுல் பிரதியிட்டுள்ளார்.

இதேவேளை புதுமுகங்களான இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள் மனவ் சுதர், ஹர்ஷ் டுபே மற்றும் வேகப்பந்துவீச்சாளர் குர்னூர் பிரார் ஆகியோர் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் டுபே, பிறார் மற்றும் வேகப்பந்துவீச்சாளரான பிறின்ஸ் யாதவ் ஆகியோர் ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் இடம்பெற்றுள்ளதுடன். இஷன் கிஷானும் ஒருநாள் குழாமுக்குத் திரும்பியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X