2025 ஜூலை 17, வியாழக்கிழமை

‘இந்தியாவுக்கெதிரான இறுதி 2 டெஸ்ட்களில் விளையாட முடியும்’

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 16 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான தொடரின் இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியுமென இங்கிலாந்தின் ஜொஃப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.

காயங்கள் காரணமாக நான்கு ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டைத் தவறவிட்டிருந்த 30 வயதான ஆர்ச்சர், இந்தியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டிலேயே தனது மீள்வருகையை புரிந்திருந்தார்.

நான்காவது, ஐந்தாவது டெஸ்ட் போட்டிகள் மூன்று நாள்கள் இடைவெளியில் ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர்கள் அனுமதித்தால் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தன்னால் விளையாட முடியுமெனத் தெரிவித்த ஆர்ச்சர், ஆஷஸ் தொடருக்கான குழாமில் இடம்பெறுவதற்கான தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X