2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

இந்தியாவை வென்ற அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 13 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் உலகக் கிண்ணத் தொடரில், விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற இந்தியாவுடனான போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, ஸ்மிருதி மந்தனாவின் 80 (66), பிரதிகா ராவலின் 75 (96), ஹர்லீன் தியோலின் 38 (42), ஜெமிமா றொட்றிகாஸின் 33 (21), றிச்சா கோஷின் 32 (22) ஓட்டங்களோடு 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 330 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அனபெல் சதர்லேண்ட் 5, சோபி மொலினெக்ஸ் 3, அஷ்லெய் காட்னர் மற்றும் மேகன் ஸ்கட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 331 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, அலைஸா ஹீலியின் 142 (107), எலைஸ் பெரியின் ஆட்டமிழக்காத 47 (52), காட்னரின் 45 (46), போபி லிட்ச்பீல்டின் 40 (39) ஓட்டங்களோடு 49 ஓவர்களில் 7 விக்கெட்டுகளில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் ஷ்றீ சரணி 3, தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகியாக ஹீலி தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X