2025 ஜூலை 12, சனிக்கிழமை

இந்தியாவை வெல்லுமா இங்கிலாந்து?

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 09 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது லோர்ட்ஸில் வியாழக்கிழமை (10) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில் இப்போட்டியில் இந்திய அணிக்குத் திரும்பவுள்ள ஜஸ்பிரிட் பும்ரா பிரசீத் கிருஷ்ணாவை பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. தவிர நிதிஷ் குமார் ரெட்டியை சாய் சுதர்சனும், வொஷிங்டன் சுந்தரை குல்தீப் யாதவ்வும் பிரதியிடும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

மறுபக்கமாக இங்கிலாந்து அணியில் பிறைடன் கார்ஸை ஜொஃப்ரா ஆர்ச்சர் பிரதியிடுவதோடு, ஜொஷ் டொங்கை ஜேமி ஒவெர்ட்டன் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டிக்கான ஆடுகளமானது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதாகக் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்துக் குழாமில் ஜேக்கப் பெத்தெல் காணப்படுகின்ற நிலையில், ஒலி போப் தொடர்ச்சியாக ஓட்டங்களைப் பெற வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .