Shanmugan Murugavel / 2021 நவம்பர் 24 , பி.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரானது, கான்பூரில் நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்டுடன் ஆரம்பிக்கவுள்ளது.
இந்திய அணித்தலைவர் விராட் கோலி, றோஹித் ஷர்மா, மொஹமட் ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா, றிஷப் பண்ட் ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருடன், சூரியகுமார் யாதவ்வும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது. ஏனெனில், காயம் காரணமாக லோகேஷ் ராகுலும் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். வேகப்பந்துவீச்சாளர்களாக மொஹமட் சிராஜ்ஜும், இஷாந்த் ஷர்மாவும் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கமாக நியூசிலாந்து அணிப்பக்கம், காயமடைந்த டெவோன் கொன்வேயை வில் யங்க் பிரதியிடுவதோடு, அஜாஸ் பட்டேலும், வில் சோமர்விலியும் சுழற்பந்துவீச்சாளர்களாகக் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
13 minute ago
20 minute ago
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
25 minute ago
2 hours ago