2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

இந்தியாவுக்கு சவாலளிக்குமா மே. தீவுகள்?

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 09 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டெல்லியில் வெள்ளிக்கிழமை (10) காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே இந்தியா இனிங்ஸால் வென்ற நிலையில் மிகப் பெரியளவு முன்னேற்றத்தை காண்பித்தால் மட்டுமே இந்தியாவுக்கு சவாலையாவது வழங்க முடியும்.

இப்போட்டிக்கான ஆடுகளமானது துடுப்பாட்டவீரர்களுக்கு சாதகமானதெனக் கூறப்படுகின்ற நிலையில் இது மேற்கிந்தியத் துடுப்பாட்டவீரர்களுக்கு சிறிதளவு நிம்மதியை வழங்கலாம்.

இரண்டு அணிகளிலும் பெரும்பாலும் மாற்றமிருக்காதென்றே நம்பப்படுகின்றது.

துருவ் ஜுரேல் பிரகாசிக்கின்ற நிலையில், வெளியில் தேவ்டுட் படிக்கல் உள்ளிட்ட நிறைய வீரர்கள் காத்திருக்கின்ற நிலையில் சாய் சுதர்சன் ஓட்டங்களைப் பெற வேண்டியது கட்டாயமாகின்றது.

மறுபக்கமாக  வெளிநாட்டுப் போட்டிகளிலும் தன்னை அணியில் இணைக்க வேண்டிய அழுத்தத்தை கொடுப்பதற்கு குல்தீப் யாதவ் விக்கெட்டுகளை விழுத்த வேண்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .