Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டுக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் இடம்பெற்றுள்ள கணுக்கால் காயத்திலிருந்து குணமடைந்த மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்துவீச்சாளர் கீமோ போல், தன்னை முதலாவது டெஸ்டுக்கான குழாமில் பிரதியிட்டிருந்த வேகப்பந்துவீச்சாளர் மிக்கேல் கமின்ஸை பிரதியிட்டுள்ளார்.
குறித்த மாற்றமொன்று மட்டுமே இந்தியாவிடம் 318 ஓட்டங்களால் முதலாவது போட்டியில் தோல்வியடைந்த மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் மேற்கொள்ளப்பட்டதுடன், கணுக்கால் காயத்திலிருந்து விக்கெட் காப்பாளர் ஷேன் டெளரிச் பார்படோஸில் குணமடைந்து வருகின்ற நிலையில், மேலதிக விக்கெட் காப்பாளர் ஜஹ்மர் ஹமில்டன் குழாமில் இருக்கின்றபோதும் முதலாவது டெஸ்டைப் போன்று ஷே ஹோப்பே விக்கெட் காப்பில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.
குழாம்: ஜேஸன் ஹோல்டர் (அணித்தலைவர்), கிரேய்க் பிறத்வெய்ட், டரன் பிராவோ, ஷமரா ப்றூக்ஸ், ஜோன் கம்பெல், றொஸ்டன் சேஸ்ம் ரஹீம் கொர்ன்வெல், ஜஹ்மர் ஹமில்டன் (விக்கெட் காப்பாளர்), ஷே ஹோப் (விக்கெட் காப்பாளர்), ஷிம்ரோன் ஹெட்மயர், ஷனொன் கப்ரியல், கீமோ போல், கேமார் றோச்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago