2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இந்தியாவை வீழ்த்துமா அவுஸ்திரேலியா?

Editorial   / 2019 பெப்ரவரி 23 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர், விசாகப்பட்டினத்தில் நாளை மறுதினம் இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

உலகக் கிண்ணத்துக்கு இன்னும் மூன்று மாதத்துக்கு சற்று அதிகமான காலமே இருக்கின்ற நிலையில், இத்தொடரும் இத்தொடரைத் தொடர்ந்து இந்தியா விளையாடவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருமே, உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இந்தியா விளையாடவுள்ள இறுதி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர் இதுவாகும் என்ற நிலையில் இத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

அதிலும் குறிப்பாக, தினேஷ் கார்த்திக்குக்கு இத்தொடர் முக்கியமானதாகக் காணப்படுகிறது. ஏனெனில், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் அவர் இடம்பெறாத நிலையில், அவர் தன்னை நிரூபிப்பதற்கான இறுதி வாய்ப்பு இதுவாகும். இந்திய உலகக் கிண்ண குழாமில், ஓரிரு இடங்களே நிரப்பப்படவேண்டியுள்ள நிலையில், றிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், விஜய் ஷங்கர், உமேஷ் யாதவ் ஆகியோரின் பெறுபேறுகள் அவதானிக்கப்படும்.

இந்நிலையில், முதுகு உபாதை காரணமாக இத்தொடரிலிருந்தும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்தும் இந்திய சகலதுறை வீரர் ஹர்டிக் பாண்டியா விலகியுள்ளார்.

மறுபக்கமாக, கடந்தாண்டு முழுவதும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் சொதப்பியிருத அவுஸ்திரேலிய அணி, உலகக் கிண்ணத்தை தக்க வைப்பதாக இருந்தால், இத்தொடரிலிருந்தாவது துடுப்பாட்டத்தில் சீரான பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திலுள்ளது.

அணித்தலைவர் ஆரோன் பின்ஞ்சிலிருந்து, உப அணித்தலைவர்களிலொவரான அலெக்ஸ் காரே, பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப், உஸ்மான் கவாஜா, கிளென் மக்ஸ்வெல், டார்சி ஷோர்ட், அஸ்தன் தேணர் ஆகியோர் அணியில் தமதிடங்களைப் பெறுவதற்கு பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய தேவையிலுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .