Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 01 , பி.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர், ஹைதரபாத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
இரண்டு அணிகளுக்குமிடையிலான, இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்று 2-0 எனத் தொடரைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா, இந்த நம்பிக்கையுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலும் களம் புகுகின்றது.
அந்தவகையில், இத்தொடரில் அவுஸ்திரேலியாவின் நாயகனாக விளங்கியிருந்த கிளென் மக்ஸ்வெல்லுடன் தற்போது குழாமில் இணைந்துள்ள ஷோண் மார்ஷ், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், உஸ்மான் கவாஜா, பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் ஆகியோர் பிரகாசிக்கும் பட்சத்தில் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலும் வெற்று குறித்து அவுஸ்திரேலியா சிந்திக்கலாம்.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவின் மிக முக்கிய பிரச்சினையாக, இன்னும் மூன்று மாதங்களுக்குள் உலகக் கிண்ணத்தை வைத்துக் கொண்டு அவ்வணியின் தலைவர் ஆரோன் பின்ஞ் ஓட்டங்களைப் பெறத் தடுமாறி வருவது அவ்வண்க்கு அழுத்தத்தை வழங்குகின்றது.
மறுபக்கமாக, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் சோதனை என இந்தியா கூறினாலும் அவ்வணி பெற்ற இரண்டு தோல்விகளும் நிச்சயம் பின்னடைவே ஆகும். அந்தவகையில், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், முழுமையான பலத்துடன் இந்திய அணி களமிறங்குமென எதிர்பார்க்கப்படுகையில், அம்பாதி ராயுடு, மகேந்திர சிங் டோணி, கேதார் யாதவ், விஜய் ஷங்கர் ஆகியோரை உள்ளடக்கிய அவ்வணியின் மத்தியவரிசையிலிருந்து தொடர்ச்சியான பெறுபேறு எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, உலகக் கிண்ணக் குழாமில் ஓரிரு இடங்கள் வெற்றிடமாக இருக்கின்ற நிலையில், றிஷப் பண்ட், இரவீந்திர ஜடேஜா, சிதார்த் கோல் ஆகியோர் அணியில் இடம்ப்பெற்றால், அவர்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினால் மாத்திரமே உலகக் கிண்ண குழாமில் இடம்பிடிக்கலாம். ஏனெனில், குழாமுக்கு வெளியேயும் தினேஷ் கார்த்திக், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago