Shanmugan Murugavel / 2021 மார்ச் 11 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, அஹமதபாத்தில் நாளை இரவு ஏழு மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
இவ்வாண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது இந்தியாவில் பிற்பகுதியில் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான சிறந்த தயார்படுத்தலாக இத்தொடர் இரண்டு அணிகளுக்கும் காணப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலாமிடத்தில் இங்கிலாந்தும், இரண்டாமிடத்தில் இந்தியாவும் காணப்படுகின்ற நிலையில், தொடரை 4-1 என அல்லது 5-0 என இந்தியா வென்றால் முதலாமிடத்துக்கு இந்தியா முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கமாக, 1-4 அல்லது 0-5 என தொடரை இழந்தால் மூன்றாமிடத்துக்கு இந்தியா கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
47 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
58 minute ago