2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இன்னுமொரு டெஸ்டும் நிர்ணயிக்கப்பட்டது?

Editorial   / 2018 மே 31 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

போட்டி நிர்ணயம் தொடர்பான அல் ஜஸீரா தொலைக்காட்சியின் இரண்டாவது ஆவணப் படம் வெளியிடப்படவுள்ள நிலையில், அந்த ஆவணப்படத்தில், முதலாவது ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்ட இரண்டு டெஸ்ட்களுக்கு மேலதிகமாக இன்னொரு டெஸ்ட் போட்டியிலும் நிர்ணயம் இடம்பெற்றிருக்கலாம் என்றவாறு டெய்லிமெய்ல் இணையத்தளம் கருத்து வெளியிட்டுள்ளது.

முதலாவது ஆவணப்படத்தில், இந்தியாவில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையேயான டெஸ்டிலும் கடந்தாண்டு இடம்பெற்ற இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையேயான டெஸ்டிலும் குறிப்பிட்ட நேரத்தில் மெதுவாக ஓட்டங்களைப் பெறும்படியாக ஸ்பொட் பிக்ஸிங் இடம்பெற்றிருப்பதாக அல் ஜஸீரா வெளிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தாவூத் இப்ராஹிமின் டி நிறுவனத்தின் போட்டி நிர்ணயத்துக்கான மத்திய தர பணியாளரான அனீல் முனாவாரைப் பற்றியே வரவுள்ள ஆவணப்படத்தின் பிரதான விடயங்கள் இருக்குமென்று கூறப்படுகிறது.

இச்சந்தர்ப்பத்தில், அனீல் முனாவார், காலியிலுள்ள ஹொட்டலொன்றின் வரவேற்பறையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களான டிம் பிரஸ்னன், கிறேம் ஸ்வான் ஆகியோருக்கு அருகிலிருக்கும் புகைப்படம் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும், டிம் பிரஸ்னனோ அல்லது கிறேமி ஸ்வானோ எந்தத் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக தகவல்கள் இல்லை.

குறித்த புகைப்படம், 2012ஆம் ஆண்டு உலக இருபதுக்கு – 20 தொடர் இலங்கையில் இடம்பெறும்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற நிலையில், கொழும்பிலுள்ள ஹொட்டலொன்றின் வரவேற்பறையொன்றில் மேற்கிந்தியத் தீவுகளின் பிரபலமான வீரருக்கு பக்கத்தில் அனீல் முனாவார் இருக்கும் புகைப்படமொன்றையும் பார்வையிட்டுள்ளதாக டெய்லிமெய்ல் இணையத்தளம் கூறியுள்ளது.

இந்நிலையில், குறித்த புகைப்படம் குறித்து கருத்துத் தெரிவிக்க டிம் பிரஸ்னனும் கிறேமி ஸ்வானும் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .