Editorial / 2017 ஒக்டோபர் 26 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர், புளூம்பொன்டெய்னில், இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
தென்னாபிரிக்க அணியின் தலைவர் பப் டு பிளெஸி காயம் காரணமாக, ஆறு வாரங்களுக்கு போட்டிகளில் விளையாட முடியாத நிலையில், ஜெ.பி டுமினி தலைமையில் தென்னாபிரிக்க அணி களமிறங்குகிறது.
மறுபக்கம், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து மஷ்ரபி மோர்தஸா ஓய்வுபெற்ற பின்னர், பங்களாதேஷின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளின் அணித்தலைவராக ஷகிப் அல் ஹஸன் பொறுப்பேற்ற பின்னர், முதற்தடவையாக ஷகிப்பின் தலைமையின் கீழ் இத்தொடரில் பங்களாதேஷ் களமிறங்குகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .