Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 04 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு பாகிஸ்தானின் அப்ரார் அஹ்மட் முன்னேறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான 3 போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை இலங்கைக்கெதிரான 3 போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் அடில் ரஷீட், ஆறாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கெதிரான 3 போட்டிகளிலும் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாகிஸ்தானின் மொஹமட் நவாஸ், 15ஆம் இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.
இதுதவிர பாகிஸ்தானுக்கெதிரான முதலிரண்டு போட்டிகளிலும் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் அடம் ஸாம்பா, 10ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்று போட்டிகளில் 119 ஓட்டங்களைப் பெற்றதோடு, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாகிஸ்தானின் சைம் அயூப், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தானின் மொஹமட் நவாஸ், ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை இலங்கைக்கெதிரான 3 போட்டிகளில் 81 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் ஜொஸ் பட்லர், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகளில் 80 ஓட்டங்களைப் பெற்ற இலங்கையின் பதும் நிஸங்க, ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.
இதுதவிர நியூசிலாந்துக்கெதிரான ஐந்தாவது போட்டியில் 63 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் சூரியகுமார் யாதவ், ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை இந்தியாவுக்கெதிரான நான்காவது போட்டியில் 62 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் டிம் செய்ஃபேர்ட், 10ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
2 hours ago
04 Feb 2026
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
04 Feb 2026
04 Feb 2026