2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

இருபதுக்கு – 20 போட்டிகளைத் தவறவிடும் வில்லியம்சன்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரைத் தவறவிடவுள்ள நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் அணிக்குத் திரும்புவதை இலக்காகக் கொண்டுள்ளார்.

சிறிய மருத்துவப் பிரச்சினையை கடந்த மாதம் வில்லியம்சன் எதிர்கொண்டதாகவும், குணமடைய நேரம் தேவையென இணங்கப்பட்டதாக நியூசிலாந்தின் பயிற்சியாளர் றொப் வோல்டர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை காயங்களிலிருந்து குணமடைந்த அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர், றஷின் றவீந்திர ஆகியோர் குழாமுக்குத் திரும்பியுள்ள நிலையில் பின்தொடை தசை நார் காயம் காரணமாக தொடரை வேகப்பந்துவீச்சாளர் பென் சியர்ஸ் தவறவிடுகின்றார்.

பின் அலென், அடம் மில்ன், வில் ஓ ருர்க், கிளென் பிலிப்ஸ், லொக்கி பெர்கியூசன் ஆகியோர் காயத்திலிருந்து குணமடையாத நிலையில், இஷ் சோதி குழாமில் இடம்பெறவில்லை.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் பிரகாசித்த ஜிம்மி நீஷம் தனதிடத்தை தக்க வைத்துள்ளார்.

குழாம்: மிற்செல் சான்ட்னெர் (அணித்தலைவர்), மிஷெல் பிறேஸ்வெல், மார்க் சப்மன், டெவொன் கொன்வே, ஜேக்கப் டஃபி, ஸகரி போக்ஸ், மற் ஹென்றி, பெவன் ஜேக்கப்ஸ், கைல் ஜேமிஸன், டரைல் மிற்செல், ஜிம்மி நீஷம், றஷின் றவீந்திர, டிம் றொபின்சன், டிம் செய்ஃபேர்ட் (விக்கெட் காப்பாளர்).


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X