Shanmugan Murugavel / 2024 ஜூலை 31 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமில் துடுப்பாட்டவீரர் நிஷான் மதுஷ்க இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டுள்ள 24 வயதான மதுஷ்க, ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்.
இந்நிலையில் அணித்தலைவராக குசல் மென்டிஸை சரித் அசலங்க பிரதியிட்டுள்ளார்.
தவிர, இறுதியாக இலங்கை விளையாடிய பங்களாதேஷுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமில் இடம்பெற்ற பிரமோத் மதுஷன், லஹிரு குமார ஆகியோர் இம்முறை குழாமில் இடம்பெறாத நிலையில் மதீஷ பத்திரண, அசித பெர்ணாண்டோ ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
குழாம்: சரித் அசலங்க (அணித்தலைவர்), பதும் நிஸங்க, அவிஷ்க பெர்ணாண்டோ, குசல் மென்டிஸ், சதீர சமரவிக்கிரம, கமிந்து மென்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்க, வனிது ஹசரங்க, டுனித் வெல்லலாகே, சாமிக கருணாரத்ன, மகேஷ் தீக்ஷன, அகில தனஞ்சய, டில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரண, அசித பெர்ணாண்டோ.
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago