2023 மார்ச் 30, வியாழக்கிழமை

இலங்கை எதிர் நியூசிலாந்து: நாளை ஆரம்பிக்கிறது இரண்டாவது டெஸ்ட்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 16 , பி.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வெலிங்டனில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இறுதிப் பந்தில் இலங்கை தோற்றிருந்தாலும் நியூசிலாந்துக்கு பலத்த சவாலை வழங்கியிருந்தது.

அந்தவகையில் இலங்கையணியில் பெரும்பாலும் மாற்றங்கள் இருக்காதென்றபோதும் தொடர்ந்து விக்கெட் காப்பு, துடுப்பாட்டத்தில் சொதப்பி வரும் நிரோஷன் டிக்வெல்லவுக்குப் பதிலாக நிஷான் மதுஷ்கவுக்கு அறிமுகம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, குறுகிய கால இடைவெளியில் அடுத்த போட்டி ஆரம்பிக்கின்ற நிலையில் லஹிரு குமார காயமடையும் வாய்ப்புகள் காணப்படுவதால், அவரை விஷ்வ பெர்ணாண்டோ அல்லது மிலான் ரத்னாயக்க பிரதியிடும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

மறுப்பக்கமாக நியூசிலாந்து அணியில் காயமடைந்த நீல் வக்னரை ஸ்கொட் குக்லஜின் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .