Editorial / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் முரளி விஜய் இணைக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கெதிராக இலங்கையில் வைத்து இடம்பெற்ற தொடரை, காயம் காரணமாகத் தவறவிட்டிருந்த நிலையிலேயே, அவர் இத்தொடரில் இணைக்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், நவம்பர் 16ஆம் திகதி, கொல்கத்தாவில் ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
இந்நிலையில், இத்தொடரின் முதலிரு போட்டிகளுக்குமான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், இலங்கைக்கெதிராக இலங்கையில் இடம்பெற்ற தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அபினவ் முகுந்த், சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் பட்டேல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். முரளி விஜய், உள்வாங்கப்பட்டுள்ளார்.
இத்தொடரில், இந்தியத் தலைவர் விராத் கோலிக்கு, ஓய்வு வழங்கப்படுமென்ற எதிர்பார்ப்பு நிலவியது. கோலியே, தனக்கு ஓய்வு தேவையெனக் கோரியிருந்தார் எனத் தகவல்கள் தெரிவித்தன.எனினும், இத்தொடரில் அவர் விளையாடவுள்ளார் எனத் தெரிவித்த தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், ஒரு கட்டத்தில் அவருக்கு ஓய்வு வழங்கப்படுமெனத் தெரிவித்தார். எனவே, 3ஆவது போட்டியில், அவருக்கு ஓய்வு வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
குழாம்: விராத் கோலி, முரளி விஜய், லோகேஷ் ராகுல், ஷீகர் தவான், செற்றேஸ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே, றோகித் ஷர்மா, ரிதிமான் சஹா, இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹார்டிக் பாண்டியா, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார்.
இதேவேளை, நியூசிலாந்து அணிக்கெதிராக, நவம்பர் 1ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள, 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், முதலாவது போட்டியில் விளையாடவுள்ள ஆஷிஷ் நெஹ்ரா, அப்போட்டியுடன், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளார்.
குழாம்: விராத் கோலி, ஷீகர் தவான், லோகேஷ் ராகுல், மகேந்திரசிங் டோணி, மனிஷ் பாண்டே, டினேஷ் கார்த்திக், ஷ்ரேயாஸ் ஐயர், ஹார்டிக் பாண்டியா, அக்ஸர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திரா சஹால், ஜஸ்பிறிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆஷிஸ் நெஹ்ரை, மொஹமட் சிராஜ்.
23 minute ago
31 minute ago
38 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
38 minute ago
44 minute ago