Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஒப்பந்தம் முடிவடைந்த 15 மாதங்களில், இலங்கை கிரிக்கெட் சபையின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய அணியுடன் தனித்துப் பணியாற்றுவது இல்லாமல், நாடளாவிய ரீதியில் வேகப்பந்துவீச்சுத் திறமைகளை அடையாளங் காணுதல் மற்றும் வளர்த்தெடுத்தலே வாஸின் புதிய பதவியின் நோக்கமாக உள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் ஆலோசகரான இலங்கையணியின் முன்னாள் தலைவரான அரவிந்த டி சில்வாவே வாஸின் மேற்படி நியமனத்துக்கு பிரதான காரணம் என்று கூறப்படுகையில், முன்னாள் வீரர்களின் திறமைகளை இலங்கை கிரிக்கெட் சபை பயன்படுத்துவது முக்கியமானது என அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையணியின் களத்தடுப்புப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிக் போத்தாஸ், இந்த வாரம் முதல் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், எஸ்.எஸ்.சி மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (13) ஆரம்பிக்கவுள்ள போட்டியுடன் முடிவுறும் அவுஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரின் இறுதியில் விருதுகளை வழங்குவதற்கு இலங்கை அணியின முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை இலங்கை கிரிக்கெட் சபை அழைக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
22 minute ago
30 minute ago
37 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
37 minute ago
43 minute ago