Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 12 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் தற்போது முடிவுக்கு வந்த ஓமானுடனான குழு பி போட்டியில் இலங்கை வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஓமானின் அணித்தலைவர் ஜதிந்தர் சிங், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
இலங்கையணியில் கடந்த போட்டியில் விளையாடிய வனிது ஹசரங்கவை துஷான் ஹேமந்த பிரதியிட்டிருந்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, பவன் ரத்னாயக்கவின் 60 (28), அணித்தலைவர் தசுன் ஷானகவின் 50 (20), குசல் மென்டிஸின் 61 (45), கமிந்து மென்டிஸின் ஆட்டமிழக்காத 19 (07) ஓட்டங்களுடனேயே 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஷா பைஸல் 4-0-28-0, ஜிதென் ராமனான்டி 4-0-41-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 226 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஓமான், துஷ்மந்த சமீர (2), மகேஷ் தீக்ஷன (2), ஹேமந்த, கமிந்து, டுனித் வெல்லலாகேயிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களையே பெற்று 105 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக பவன் ரத்னாயக்க தெரிவானார்.
59 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
2 hours ago