Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 12 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் நடைபெற்று வரும் இத்தாலிக்கெதிரான குழு சி போட்டியில் 123 ஓட்டங்களுடன் நேபாளம் சுருண்டுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நேபாளம், அலி ஹஸன், கிறிஷன் கலுகமகே (3), ஜெ.ஜெ. ஸ்மட்ஸ், பென் மனென்டி (2), ஜஸ்பிறீட் சிங்கிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களையே பெற்றது. ஆரிஃப் ஷெய்க் 27 (24), அணித்தலைவர் றோஹித் பெளடெல் 23 (14), ஆசிஃப் ஷெய்க் 20 (20), கரன் கே.சி ஆட்டமிழக்காமல் 18 (11), டிபேந்திர சிங் ஐரீ 17 (18) ஓட்டங்களைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .