2025 ஜூலை 21, திங்கட்கிழமை

உலகக் கிண்ணம் வரை பயிற்றுநராக திலான்

Editorial   / 2017 நவம்பர் 05 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்தில், 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணம் வரை, இலங்கையணியின் துடுப்பாட்டம் பயிற்றுநராக, இலங்கையணியின் முன்னாள் வீரரான திலான் சமரவீர கடமையாற்றுவார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால உறுதிப்படுத்தியுள்ளார்.

தான் வசிக்கும் அவுஸ்திரேலியாவின் மெல்பேணிலிருந்து இலங்கைக்கு திலான் சமரவீர திரும்பியவுடன் குறித்த விடயம் தொடர்பான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இலங்கை அணியுடன் இந்தியாவுக்கு  சமரவீர பயணமாகவுள்ளார்.

இதுவே திலான் சமரவீரவுக்கு முதலாவது துடுப்பாட்டப் பயிற்றுநர் பதவி என்றபோதும் பங்களாதேஷ், அவுஸ்திரேலிய அணிகளுடன் துடுப்பாட்ட ஆலோசகராக முன்னர் கடமையாற்றியிருந்தார். தற்காலிக அடிப்படையில், இலங்கையணியின் துடுப்பாட்டப் பயிற்றுநராக இவ்வாண்டு ஜூலையில் பதவியேற்றிருந்த ஹஷான் திலகரட்னவையே சமரவீர பிரதியீடு செய்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .