Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 26 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனில் இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு இடம்பெற்ற சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் சிறந்த விருதுகள் வழங்கும் விழாவில், உலகின் சிறந்த வீரராக குரோஷிய அணியின் தலைவரான லூகா மோட்ரிட்ச் பெயரிடப்பட்டார்.
ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் மத்தியகள வீரருமான மோட்ரிட்ச், தற்போது இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸிலுள்ள தனது முன்னாள் சக வீரர் கிறிஸ்டியானோ ரொனல்டோ, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்கள வீரரான மொஹமட் சாலா ஆகியோரை வென்றே உலகின் சிறந்த வீரராகத் தெரிவாகியிருந்தார்.
33 வயதான மோட்ரிட்ச், இவ்வாண்டு மேயில் சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றதுடன், இவ்வாண்டு ஜூலையில் இடம்பெற்ற உலகக் கிண்ணத்தில் குரோஷியாவை உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முதள் தடவை அழைத்துச் சென்றிருந்தார்.
இந்நிலையில், பிரேஸிலினதும் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பெண்களுக்கான கால்பந்தாட்ட லீக் அணியான ஒர்லாண்டோ பிரைட் அணியினதும் முன்கள வீராங்கனையான மார்தா, சிறந்த வீராங்கனையாகத் தெரிவாகியிருந்தார்.
இதேவேளை, இவ்வாண்டு உலகக் கிண்ணத்தை பிரான்ஸுக்கு பெற்றுக் கொடுத்த பயிற்சியாளர் டிடியர் டெஷம்ஸ், ஆண்களுக்கான சிறந்த பயிற்சியாளராகத் தெரிவானார்.
இந்நிலையில், இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், எவெர்ற்றனுக்கெதிராக கடந்தாண்டு டிசெம்பரில் லிவர்பூலின் மைதானத்தில் மொஹமட் சாலா பெற்ற கோல் சிறந்த கோலாகக் தெரிவாகியிருந்தது.
இதுதவிர, 1982ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக விளையாடிய பெருவுக்கு ஆதரவளிக்கும் முகமாக ரஷ்யாவுக்கு ஆயிரக்கணக்கான பெரு ஆதரவாளர்கள் சென்றிருந்த நிலையில் அவர்களுக்கு சிறந்த இரசிகர்களுக்கான விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், சிறந்த கோல் காப்பாளராக பெல்ஜியம், றியல் மட்ரிட்டின் கோல் காப்பாளரான திபோ கோர்துவா, டென்மார்க்கின் கஸ்பர் சூமைக்கல், பிரான்ஸின் ஹியூலோ லோரிஸ் ஆகியோரைத் தாண்டி வெற்றிபெற்றார்.
இதேவேளை, உலக பதினொருவர் அணியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஈடின் ஹஸார்ட், லியனல் மெஸ்ஸி, கிலியான் மப்பே, லூகா மோட்ரிட்ச், என்கலோ கன்டே, மார்ஷெலோ, ரபேல் வரான், சேர்ஜியோ றாமோஸ், டனி அல்விஸ், டேவிட் டி கியா ஆகியோர் தெரிவாகினர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago