Shanmugan Murugavel / 2015 நவம்பர் 29 , மு.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக குத்துச்சண்டை மிகுஎடைப் (ஹெவிவெய்ட்) பிரிவின் சம்பியனாக, டைசன் பியூரி தெரிவாகியுள்ளார். விளாடிமிர் கிளிட்ஸ்ச்கோவைத் தோற்கடித்தே, அவர் சம்பியன் பட்டம் வென்றார்.
இப்போட்டியை வெற்றிகொள்வாரென, விளாடிமிர் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், குத்துச்சண்டை வரலாற்றின் மிகவும் அதிர்ச்சிகரமான வெற்றிகளில் ஒன்றாக, இது கருதப்படுகிறது.
மிகவும் இறுக்கமான போட்டியாகவும், அவ்வப்போது கடுமையானதாகவும் அமைந்த இப்போட்டியில், நடுவர்களின் ஏகோபித்த தெரிவாக, பியூரி தெரிவானார். அவர், 115-112, 115-112, 116-111 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றார்.
27 வயதான பியூரி, பிரித்தானியாவைச் சேர்ந்தவரென்பதோடு, இப்பட்டத்தை வெல்லும் 5ஆவது பிரித்தானியராவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .