Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 24 , பி.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெய்ஜிங்கில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற மூவர் உட்பட 11 பேர், ஊக்கமருந்துப் பாவனை காரணமாகத் தங்களது பதக்கங்களை இழக்கவுள்ளனர். ஊக்கமருந்துப் பாவனை தொடர்பாகவே அவர்கள் இப்பதக்கங்களை இழக்கவுள்ளனர்.
ஊக்கமருந்துப் பாவனை தொடர்பான சோதனைகளில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக, ஊக்கமருந்துப் பாவனையில் ஈடுபட்டோர் தப்பியிருந்ததால், மீளவும் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையிலேயே, 2008ஆம் ஆண்டு பெறப்பட்ட மாதிரிகள் மீளச் சோதிக்கப்பட்டதில், பாரம் தூக்குதலில் தங்கப் பதக்கம் வென்ற மூன்று சீனர்களும், வேறு பதக்கங்களை வென்ற இன்னும் எட்டுப் பேரும், ஊக்கமருந்துப் பாவனையில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே அவர்களது பதக்கங்கள் பறிக்கப்படவுள்ளன.
சீனாவின் காவோ லெய், லியூ சுன்ஹொங், சென் ஸியஸியா ஆகியோர்,பெய்ஜிங்கில் தங்கம் வென்றிருந்தனர். ஏனையோராக, பெலாரஸின் அன்ட்ரேய் றிபாகோ (உலக சாதனையாளர். கடந்த முறை வெள்ளி), பெலாரஸின் அனஸ்தேசியா நொவிகோவா, கஸக்ஸ்தானின் மரியா கிரபோவெட்ஸ்காயா, இரினா நெக்ராஜோவா, ரஷ்யாவின் கட்ஸிமுரட் அக்கேவ், ட்மிற்ரி லபிகோவ், உக்ரைனின் நட்டாலியா டவிடோவா, ஒல்ஹா கொரோப்கா ஆகியோரே இவ்வாறு சிக்கி, தங்களது பதக்கங்களை இழக்கவுள்ளனர்.
இவர்கள் தவிர, கடந்த முறை போட்டிகளில் பங்குபற்றி, பதக்கங்களை வென்றிருக்காத நால்வரும் பெயரிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
36 minute ago
48 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
48 minute ago
2 hours ago
2 hours ago