2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஏ.சி மிலனை வென்றது ஜுவென்டஸ்

Editorial   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டியொன்றில், 2-0 என்ற கோல் கணக்கில், ஏ.சி மிலனை ஜுவென்டஸ் வென்றது. ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கொன்ஸலோ ஹியூகைன் பெற்றிருந்தார். இப்போட்டியில் முதலாவது கோலைப் பெறும்போது, சீரி ஏ தொடரில் தனது 100ஆவது கோலை கொன்ஸலோ ஹியூகைன் பதிவுசெய்திருந்தார்.

அந்தவகையில், இப்போட்டியின் முடிவில் 28 புள்ளிகளைப் பெற்றுள்ள ஜுவென்டஸ், சீரி ஏ புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .