Editorial / 2023 மே 25 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் சி.எஸ்.கே. கேப்டன் தோனி விளையாடுவதற்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சி.எஸ்.கே. வீரர் பதிரனா, 12 ஆவது ஓவரை வீசிய பிறகு, சிறிது நேரம் ஓய்வெடுக்க பெவிலியன் திரும்பினார். பின்னர் 16 ஆவது ஓவரை வீசுவதற்கு அவர் களத்திற்கு வந்த போது நடுவர்கள் பதிரனாவை பந்து வீச அனுமதிக்க மறுத்தனர். விதிப்படி அவர் பந்து வீசுவதற்கு மேலும் 4 நிமிடங்கள் களத்தில் காத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
அப்போது, மகேந்திர சிங் தோனி நடுவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் பதிரனா பந்து வீசுவதற்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில்,தோனி வேண்டுமென்றே நடுவர்களுடன் பேசி நேரத்தை தாமதப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்காக, தோனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவருக்கு அபராதமோ அல்லது இறுதி ஆட்டத்தில் விளையாட தடையோ விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சி.எஸ்.கே.ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
28 minute ago
33 minute ago
45 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago
45 minute ago
48 minute ago