Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் நேற்றைய இரண்டாம் நாளில் இடம்பெற்ற முதலாவது சுற்றுப் போட்டிகளில் வென்ற உலகின் இரண்டாம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி உள்ளிட்ட முதல் 10 தரவரிசையில் காணப்படும் 10 வீரர்கள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
20 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ரொஜர் பெடரர், 6-2, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஜப்பானின் யொஷிஹிட்டோ நிஷியோகாவை வென்றிருந்தார்.
கரோலின் வொஸ்னியாக்கி, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோஸரை வென்றார்.
உலகின் நான்காம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 6-2, 6-1, 6-2 என்ற நேர் செட்களில் கனடாவின் பீற்றர் பொலன்ஸ்கியை வென்றிருந்தார்.
13 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற உலகின் ஆறாம் நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-3, 3-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் மார்டன் புக்ஸோவிக்கை வென்றார்.
உலகின் ஏழாம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், 7-5, 6-1, என முதலிரண்டு செட்களையும் வென்று மூன்றாவது செட் 1-1 என இருந்தபோது றோமானியாவின் மரியுஸ் கோபில் போட்டியிலிருந்து விலகியிருந்த நிலையில் சிலிச் இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
உலகின் 10ஆம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கொபின், 6-2, 6-4, 7-6 (7-5) நேர் செட்களில் இத்தாலியின் பெடெரிக்கோ கையோவை வென்றார்.
உலகின் நான்காம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் மர்கரிட்டா கஸ்பர்யானை வென்றார்.
உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவா, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் யனினா விக்மயரை வென்றிருந்தார்.
உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கர்சியா, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஐக்கிய இராச்சியத்தின் ஜொஹன்னா கொன்டாவை வென்றார்.
உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான லத்தீவியாவின் ஜெலீனா ஒஸ்டபென்கோ, 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் ஜேர்மனியின் அன்ட்ரியா பெட்கோவிக்வை வென்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago