Shanmugan Murugavel / 2025 மே 25 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஜெய்ப்பூரில் சனிக்கிழமை (24) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பஞ்சாப், அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயரின் 53 (34), மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் ஆட்டமிழக்காத 44 (16), ஜொஷ் இங்லிஸின் 32 (12), பிரப்சிம்ரன் சிங்கின் 28 (18) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டஞ்க்களைப் பெற்றது. பந்துவீச்சில் முஸ்தபிசூர் ரஹ்மான் 4-0-33-3, விப்ராஜ் நிகம் 4-0-38-2, குல்தீப் யாதவ் 4-0-39-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 207 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டெல்லி, சமீர் றிஸ்வி ஆட்டமிழக்காத 58 (25), கருண் நாயரின் 44 (27), லோகேஷ் ராகுலின் 35 (21), அணித்தலைவர் பப் டு பிளெஸியின் 23 (15), செதிகுல்லாஹ் அட்டலின் 22 (16), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் ஆட்டமிழக்காத 18 (14) ஓட்டங்களோடு 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் அர்ஷ்டீப் சிங் 4-0-35-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக றிஸ்வி தெரிவானார்.
44 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
4 hours ago
4 hours ago