2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

ஒருநாள் தொடர் இன்று ஆரம்பிக்கின்றது

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 11 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது ராவல் பின்டியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் பவன் ரத்னாயக்க, கமில் மிஷார, லஹிரு உதார ஆகியோரில் ஒருவருக்கு அல்லது இருவரும்  வாய்ப்புக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது.

மற்றும்படி பதும் நிஸங்க, குசல் மென்டிஸ், அணித்தலைவர் சரித் அசலங்க, ஜனித் லியனகே ஆகியோர் முதுமெலும்பாகக் காணப்படுவதோடு, வேகப்பந்துவீச்சுப் பக்கம் துஷ்மந்த சமீர, அசித பெர்ணாண்டோ களமிறங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் பாபர் அஸாமிடமிருந்து குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு எதிர்பார்க்கப்படுவதோடு, ஹஸன் நவாஸின் இடத்தில் தொடர் பங்களிப்பை ஹுஸைன் தலாட்டிடமிருந்து அணி எதிர்பார்க்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X