Shanmugan Murugavel / 2016 ஜூன் 12 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
குறுந்தூர ஓட்டத்தில் உலக சாதனையாளரான உசைன் போல்ட், அஞ்சலோட்டத்தில் தனக்குக் கிடைத்த தங்கப் பதக்கத்தைத் திரும்ப வழங்குவதற்குத் தயாரென அறிவித்துள்ளார். அவரது அஞ்சலோட்ட அணியில் காணப்பட்ட வீரரொருவர், ஊக்கமருந்துப் பாவனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜமைக்காவின் சார்பில் போட்டிகளில் பங்குபற்றிய நெஸ்டா கார்ட்டர் என்ற வீரர், தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தினார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமது நாட்டு வீரரொருவர், தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியமை தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவிடமிருந்து அறிவிப்புக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜமைக்காவின் ஒலிம்பிக் சங்கம், வீரரின் பெயரை வெளியிட மறுத்துள்ளது.
இந்நிலையில், குறித்த வீரரின் ஊக்கமருந்துப் பாவனை உறுதிப்படுத்தப்பட்டால், அஞ்சலோட்டத்துக்கான குறித்த பதக்கம் பறிக்கப்படும். அது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த போல்ட், 'ஊக்கமருந்துப் பாவனை முடிவுகள், மிகவும் வலி தருவன. ஏனெனில், தங்கப் பதக்கங்களை வெல்லவும் சம்பியனாக வருவதற்குமே, நீங்கள் ஆண்டுக்கணக்காக உழைக்கிறீர்கள். ஆனால், வாழ்க்கையில் விடயங்கள் நடப்பதுண்டு. ஊக்கமருந்துப் பாவனை எப்போது உறுதிப்படுத்தப்பட்டால், எனது பதக்கத்தை நான் திரும்ப வழங்க வேண்டியேற்பட்டால், அதை நான் வழங்க வேண்டியிருக்கும். அது எனக்குப் பிரச்சினையன்று" என்றார்.
ஜமைக்காவின் அஞ்சலோட்ட அணியின் முக்கிய பங்கை வகித்த கார்ட்டர், 2008, 2012ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் 2011, 2013, 2015ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டிகளிலும் ஜமைக்க அணி தங்கப் பதக்கம் வெல்வதற்கு முக்கிய பங்கை வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தது.
6 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
36 minute ago