2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

ஓய்வு பெறுகிறாரா தோனி?

Freelancer   / 2023 மே 24 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐபிஎல் தொடரின் ஏலம் நடைபெறவுள்ளதாகவும் அதற்கு முன்னதாக தான் ஐபிஎல் போட்டிகளில் தொடர்வதா இல்லையா என முடிவு எடுப்பேன் எனவும்  சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம். எஸ். தோனி  நேற்றைய (23) தினம் தெரிவித்தார்.

இதுதான் நீங்கள் பங்குபெறும் உங்கள் இறுதி ஐபிஎல் தொடரா என தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே கேட்ட போது, “ எனக்கு தெரியவில்லை, அது தொடர்பில் முடிவு எடுக்க எனக்கு 8 தொடக்கம் 9 மாதங்கள் இருக்கின்றன. சிஎஸ்கே அணிக்காக நான் எப்போதும் இருப்பேன் ” என அவர் மேலும் தெரிவித்தார்.  

நேற்றைய தினம் குஜராத் அணியைத் தோற்கடித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 2023 ஆம் ஆண்டு முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத் தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .