Shanmugan Murugavel / 2025 மே 12 , பி.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவின் அணித்தலைவர் ரஜாட் பட்டிடார் தற்போது விரல் காயமொன்றிலிருந்து குணமடைந்து வருகின்றார்.
இந்தியா, பாகிஸ்தானுக்கிடையேயான எல்லை தாண்டிய பதற்றங்கள் காரணமாக ஐ.பி.எல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படாவிட்டால் குறைந்தது இரண்டு போட்டிகளையாவது பட்டிடார் தவறவிட்டிருப்பார்.
சென்னை சுப்பர் கிங்ஸுக்கெதிரான இம்மாதம் 3ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் காயமடைந்த பட்டிடாருக்கு விரலில் பாதுகாப்புக் கவசத்தை அணிந்து மீண்டும் காயத்தை பார்வையிடும் வரையில் 10 நாள்களுக்கு பயிற்சியில் ஈடுபட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பட்டிடார் இல்லாத நிலையில் ஜிதேஷ் ஷர்மா பெங்களூருவுக்கு தலைமை தாங்குவதாக இருந்தார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago