2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

காலி டெஸ்ட் போட்டியில் ஆட்ட நிர்ணயம்; அம்பலமானது காணொளி

Editorial   / 2018 மே 27 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆட்டநிர்ணய சதி தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக, இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப் படத்தில், காலி மைதானப் பராமரிப்பாளர்கள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு ஆடுகளத்தை மாற்றியமைக்க ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சர்வதேசக் கிரிக்கெட் பேரவை, வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த விடயம் குறித்து உரிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனே, கிடைத்த தகவல்களுக்கு அமைய, உறுப்பு நாடுகளின் ஊழல் தடுப்பு அமைப்புகளுடன் இணைந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆட்ட நிர்ண சதி நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு அல் ஜசீரா தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையில் காலியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது ஆடுகளம் மாற்றியமைக்கப்பட்டதாக அல் ஜசீராவின் ஆவணப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கென, மைதான பராமரிப்பாளர்களுக்கு இலஞ்சமாக ஒரு பெரிய தொகை ஆட்டநிர்ண பந்தயக்காரர்களால் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இனிங்ஸில் 106 ஓட்டங்களுக்கும், இரண்டாவது இனிங்ஸில் 183 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது. இலங்கை அணி 229 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X