Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 08 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னமரிக்க கால்பந்தாட்ட சம்மேளன தேசிய அணிகளுக்கிடையிலான கோப்பா அமெரிக்கா தொடரில் ஒன்பதாவது தடவையாக பிரேஸில் சம்பியனாகியது.
தம்நாட்டில் நடைபெற்ற 46ஆவது கோப்பா அமெரிக்கா தொடரில், மர்க்கானாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற பெருவுடனான இறுதிப் போட்டியில் வென்றதன் மூலமே ஒன்பதாவது தடவையாக கோப்பா அமெரிக்கா தொடரில் பிரேஸில் சம்பியனானது.
இப்போட்டியின் 15ஆவது நிமிடத்தில் பெருவின் பின்களவீரர்கள் இரண்டு பேரைத் தாண்டி சக முன்களவீரரான எவெர்ற்றனிடம் பிரேஸிலின் முன்கள வீரரான கப்ரியல் ஜெஸூஸ் கொடுத்த பந்தை அவர் கோலாக்க ஆரம்பத்திலேயே பிரேஸில் முன்னிலை பெற்றது.
எவ்வாறெனினும், முதற்பாதி முடிவடைய ஒரு நிமிடமிருக்கையில், பிரேஸிலின் பின்களவீரரான தியாகோ சில்வா பந்தைக் கையால் கையாண்டார் எனத் தீர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்ட பெனால்டியை பெருவின் முன்களவீரரான பலோலோ குரெரோ கோலாக்க கோலெண்ணிக்கையை பெரு சமப்படுத்தியது.
எனினும், சக முன்களவீரரான றொபேர்ட்டோ ஃபெர்மினோ வழங்க பந்தை பெற்றுக் கொண்டு முன்னேறிய பிரேஸிலின் மத்தியகளவீரரான ஆர்தர் மெலோ, கப்ரியல் ஜெஸூஸிடம் கொடுக்க அவர் அதை போட்டியின் முதற்பாதியின் இறுதி நிமிடத்தில் கோலாக்க மீண்டும் பிரேஸில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், போட்டி முடிவடைய 20 நிமிடங்களிருக்கையில், ஏற்கெனவே ஒரு தடவை மஞ்சள் அட்டை காட்டப்பெற்றிருந்த கப்ரியல் ஜெஸூஸ் வீழ்த்தப்பட்ட நிலையில் பழிதீர்த்தபோது இரண்டாவது தடவையாக மஞ்சள் அட்டை காட்டப்பெற்று சிவப்பு அட்டை பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அந்தவகையில், போட்டியில் எஞ்சிய நேரம் 10 வீரர்களோடேயே பிரேஸில் விளையாடியபோதும், போட்டியின் இறுதி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டியை அவ்வணியில் மாற்றுவீரராகக் களமிறங்கிய முன்களவீரரான றிச்சர்ட்ல்ஸன் கோலாக்கிய நிலையில் இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வென்றது.
இத்தொடரின் நாயகனாக பிரேஸிலின் அணித்தலைவரும் பின்களவீரருமான டனி அல்விஸ் தெரிவாகிய நிலையில், அதிக கோல்களைப் பெற்றவராக மூன்று கோல்களைப் பெற்றதுடன், ஒரு கோலைப் பெறுவதற்கு உதவியிருந்த எவெர்ற்றன் காணப்பட்டிருந்தார்.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago