Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான, இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரில், நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி, தமது கிண்ணத்தை தக்க வைத்து சம்பியனாகியது.
வெம்ப்ளி மைதானத்தில், நேற்று முன்தினமிரவு விலகல் முறையிலான இத்தொடரின் இறுதிப் போட்டியில், பெனால்டியில் செல்சியை வென்றே மன்செஸ்டர் சிற்றி சம்பியனாகியிருந்தது.
இப்போட்டியில் மன்செஸ்டர் சிற்றி சம்பியனாகியிருந்ததுக்கு மேலாக, செல்சியின் முகாமையாளர் மெளரிசியோ சரியால், அவ்வணியின் கோல் காப்பாளர் கெபா அரிஸபலகாவை பிரதியீடு செய்ய முயன்றமையை அவர் மீறியமையே முக்கியத்துவம் பெற்றிருந்தது.
மேலதிக நேரத்தின் இறுதி நிமிடங்களில், தசைப் பிடிப்புகளால் கெபா அரிஸபலகா அவதிப்பட்டிட்டிருந்த நிலையில், இதே தொடரில் லிவர்பூலை வென்று 2016ஆம் ஆண்டு மன்செஸ்டர் சிற்றி சம்பியனாவதற்கு, மூன்று பெனால்டிகளைத் தடுத்து உதவிய வில்லி காபலெரோவை பிரதியிட மெளரிசியோ சரி முடிவு செய்திருந்தார்.
எனினும், களத்திலிருந்து வெளியே வர கெபா அரிஸபலகா மறுத்திருந்தநிலையில், மெளரிசியோ சரிக்கும் அவரது உதவியாளர்களுக்குமிடையே கோபாவேசமான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றிருந்தன. ஒரு கட்டத்தில், மைதானத்தை விட்டு மெளரிசியோ சரி வெளியேறுவார் போலத் தோன்றியபோதும் பின்னர் அவர் கோபத்துடன் களத்தினருகே திரும்பியிருந்தார்.
இந்நிலையில், போட்டியின் மேலதிக நேரம் வரைக்கும் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், பெனால்டியில், மன்செஸ்டர் சிற்றியின் இல்கி குன்டோகன், சேர்ஜியோ அகுரோ, பெர்ணார்டோ சில்வா, ரஹீம் ஸ்டேர்லிங் ஆகியோர் கோல்களைப் பெற்றதுடன், லெரோய் சனேயின் பெனால்டியை கெபா அரிஸபலகா தடுத்திருந்தார்.
மறுபக்கமாக, செல்சியின் சீஸர் அத்பிலிகெட்டா, எமெர்சன், ஈடின் ஹஸார்ட் ஆகியோர் கோல்களைப் பெற்றபோதும் ஜோர்ஜினியோவின் பெனால்டியை மன்செஸ்டர் சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்சன் தடுத்ததோடு, டேவிட் லூயிஸின் பெனால்டி, கோல் கம்பத்தில் பட்டு வெளியே சென்ற நிலையில், 4-3 என்ற ரீதியில் பெனால்டியில் வென்றி ஆறாவது தடவையாக இத்தொடரில் மன்செஸ்டர் சிற்றி சம்பியனானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago