2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சம்பியனானது பயேர்ண் மியூனிச்

Editorial   / 2019 மே 26 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கிண்ணத் தொடரில் பயேர்ண் மியூனிச் சம்பியனானது.

ஹெர்தா பேர்ளினின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்.பி லெய்ப்ஸிக்கை வென்றே பயேர்ண் மியூனிச் சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியின் 29ஆவது நிமிடத்தில், சக பின்கள வீரரான டேவிட் அலபாவிடமிருந்து பெற்ற பந்தை பயேர்ண் மியூனிச்சின் முன்களவீரரான றொபேர்ட் லெவன்டோஸ்கி தலையால் முட்டிப் பெற்ற கோலின் மூலம் முதற்பாதி முடிவில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், இரண்டாவது பாதியில் ஆர்.பி லெய்ப்ஸிக்கின் முன்களவீரரான எமில் ஃபொர்ஸ்பேர்க் தனியே முன்னேறி வந்தபோதும் அதை அபாரமாகத் தடுத்த பயேர்ண் மியூனிச்சின் அணித்தலைவரும், கோல் காப்பாளருமான மனுவல் நோயர், தனதணியின் முன்னிலையை உறுதிப்படுத்தியிருந்தார்.

இதைத் தொடர்ந்து போட்டியின் 78ஆவது நிமிடத்தில், தமது முன்களவீரரான கிங்ஸ்லி கோமன் பெற்ற கோலின் மூலம் தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிய பயேர்ண் மியூனிச், அடுத்த ஏழாவது நிமிடத்தில் றொபேர்ட் லெவன்டோஸ்கி பெற்ற கோலுடன் இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனாகியது.

அந்தவகையில், பயேர்ண் மியூனிச்சுக்கான தமது இறுதிப் போட்டியாக அமைந்த குறித்த போட்டியில், அவ்வணியின் ஜாம்பவான்களான பிராங் றிபெரியும், ஆர்ஜன் றொபினும் மாற்று வீரர்களாகக் களமிறங்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .