Editorial / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், நேற்று அதிகாலை இடம்பெற்ற தமது ஆரம்ப குழுநிலைப் போட்டியில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் தோற்றது.
இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஈ போட்டியொன்றிலேயே 0-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பீறிமியர் லீக் கழகமான லிவர்பூல் தோல்வியடைந்திருந்தது. நாப்போலி சார்பாக, ட்ரைஸ் மேர்ட்டன்ஸ், பெர்ணான்டோ லொரன்டே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுடனான குழு எஃப் போட்டியொன்றை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் முடித்திருந்தது. இப்போட்டியில் கிடைக்கைப்பெற்ற பெனால்டியொன்றை பொரூசியா டொட்டமுண்டின் அணித்தலைவரும் முன்களவீரருமான மார்கோ றொய்ஸ் கோலாக்கத் தவறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான வலென்சியாவுடனான குழு எச் போட்டியொன்றில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது. வலென்சியா சார்பாகப் பெறப்பட்ட கோலை றொட்றிகோ பெற்றிருந்தார். இப்போட்டியில் செல்சிக்கு கிடைக்கப் பெற்ற பெனால்டியொன்றை கோலாக்க அவ்வணியின் மத்தியகளவீரர் றொஸ் பார்க்லி தவறியிருந்தார்.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற செக் குடியரசு கழகமான ஸ்லாவியா பிராக்குடனான குழு எஃப் போட்டியொன்றை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் முடித்திருந்தது. இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்கொலோ பரெல்லா பெற்றிருந்தார். ஸ்லாவியா பிராக் சார்பாகப் பெறப்பட்ட கோலை பீற்றர் ஒலயிங்கா பெற்றிருந்தார்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற ரஷ்யக் கழகமான ஸெனிட் சென். பீற்றர்ஸ்பேர்க்குடனான குழு ஜி போட்டியொன்றை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோன் முடித்திருந்தது. லயோன் சார்பாகப் பெறப்பட்ட கோலை மெம்பிஸ் டிபே பெற்றிருந்தார். ஸெனிட் சென். பீற்றர்ஸ்பேர் சார்பாகப் பெறப்பட்ட கோலை சர்தார் அஸ்முன் பெற்றிருந்தார்.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான லில்லியுடனான குழு எச் போட்டியொன்றை 3-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸ் வென்றிருந்தது. அஜக்ஸ் சார்பாக, குயின்சி புரோமேஸ், எட்ஸன் அல்வரேஸ், நிக்கொலஸ் தக்லிபிக்கோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், போர்த்துக்கல் கழகமான பெய்பிக்காவின் மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற குழு ஜி போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக் வென்றிருந்தது. ஆர்.பி லெய்ப்ஸிக் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் திமோ வேர்ணர் பெற்றிருந்தார். பெய்பிக்கா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹரிஸ் ஸெஃபெரோவிச் பெற்றிருந்தார்.
6 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago