Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூன் 03 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய முதற்தரக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் சம்பியனாகியது.
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில், சக இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரை வென்றே லிவர்பூல் சம்பியனாகியிருந்தது.
இப்போட்டியின் இரண்டாவது நிமிடத்தில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மத்தியகளவீரரான மூஸா சிஸாகோவின் கையில் பந்து பட்டதாகத் தெரிவித்து சர்ச்சைக்குரிய வகையில் மத்தியஸ்தர் வழங்கிய பெனால்டியை லிவர்பூலின் நட்சத்திர முன்களவீரரான மொஹமட் சாலா கோலாக்க, லிவர்பூல் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
குறித்த கோலைத் தொடர்ந்து முதற்பாதி முடிவு வரைக்கும் வேறெந்த கோலும் பெறப்படாத நிலையில், முதற்பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த லிவர்பூல், போட்டி முடிவடைவதற்கு மூன்று நிமிடமிருக்கையில், மாற்று வீரராகக் களமிறங்கிய தமது முன்களவீரர் டிவோக் ஒரிஜி பெற்ற கோலோடு 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
கணுக்கால் காயமொன்று காரணமாக ஏறத்தாழ இரண்டு மாதங்களாக போட்டிகளில் பங்கேற்றிருக்காத டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் நட்சத்திர முன்கள வீரர் ஹரி கேன், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் அரையிறுதிப் போட்டியின் நாயகனான லூகாஸ் மோராவை பிரதியிட்டு இப்போட்டியை ஆரம்பித்திருந்தபோதும், அவரால் இப்போட்டியில் தாக்கமெதுவையும் செலுத்த முடிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்களவீரர்களான சண் ஹெயுங் மின், லூகாஸ் மோரா, மத்தியகளவீரரான கிறிஸ்டியன் எரிக்சனின் கோல் கம்பத்தை நோக்கிய உதைகளை, லிவர்பூலின் கோல் காப்பாளர் அலிஸன் அபாரமாகத் தடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், குறித்த போட்டியில் வென்றமை மூலம் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான தொடரில் ஆறாவது தடவையாக சம்பியனாகியுள்ள லிவர்பூல், ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான தொடரில் அதிக தடவைகள் சம்பியனாகியுள்ள கழகங்களில் பட்டியலில் மூன்றாமிடத்துக்கு உயர்ந்துள்ளது. முதலாமிடத்தில், 13 தடவைகள் சம்பியனாகி ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் காணப்படுவதுடன், இரண்டாமிடத்தில் ஏழு தடவைகள் சம்பியனாகி இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலன் காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
43 minute ago